எவரெஸ்ட் சிகரத்தில் 11-வது முறையாக ஏறி இங்கிலாந்துக் காரர் சாதனை
உலகின் மிக உயரமான மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் கெண்டன் கூல் (39).இங்கிலாந்தை சேர்ந்த இவர், இமய மலையில் உள்ள நுப்ட்சே (7,861 மீட்டர்), லோட்சே (8,516 மீட்டர்), எவரெஸ்ட் (8,848 மீட்டர்) ஆகிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே 10 முறை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ள இவர், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் 11-வது முறையாக எவரெஸ்ட்டில் ஏறி இதற்கு முந்தைய தனது சாதனைகளை முறியடித்துள்ளார்.
இமய மலையில் உள்ள 3 உயர்ந்த சிகரங்களையும் பத்தே நாட்களில் அடையும் விதமாக இவர் தொடங்கிய முயற்சி இன்று சாதனையாக நிறைவேறியுள்ளது.
உலகின் மிக உயரமான மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் கெண்டன் கூல் (39).இங்கிலாந்தை சேர்ந்த இவர், இமய மலையில் உள்ள நுப்ட்சே (7,861 மீட்டர்), லோட்சே (8,516 மீட்டர்), எவரெஸ்ட் (8,848 மீட்டர்) ஆகிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்த
|
சைபீரியா: 20 மீட்டர் சுரங்கம் அமைத்து கொலை - கொள்ளை கைதிகள் தப்பி ஓட்டம்
சோவியத் ரஷ்யாவில் இணைந்துள்ள நாடுகளில் ஒன்று சைபீரியா.கிழக்கு சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் மிகப்பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை மர்கோவோ என்ற கிராமத்தில் இருக்கும் தொழிற்பேட்டைக்கு பயிற்சிக்காக அனுப்பி வைப்பது வழக்கமான நடைமுறை.
இவ்வகையில், இந்த தொழிற்பேட்டையில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தண்டனை பெற்ற 4 கைதிகள் தச்சு வேலை செய்து வந்தனர். வேலை செய்யும் இடத்தில் 20 மீட்டம் நீளம் கொண்ட சுரங்கத்தை ஏற்படுத்தி அவ்வழியாக நேற்று அவர்கள் தப்பிச் சென்றனர்.
அவர்களை தேடும் பணியில் சுமார் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கவனக்குறைவாக இருந்த சிறை தலைமை அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
சோவியத் ரஷ்யாவில் இணைந்துள்ள நாடுகளில் ஒன்று சைபீரியா.கிழக்கு சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் மிகப்பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை மர்கோவோ என்ற கிராமத்தில் இருக்
|
கஞ்சா விற்ற வழக்கில் 85 வயது பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில்
சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் சக்கர பாணி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (85). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக பல வழக்குகள் உள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு கிருஷ்வேணி வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு போதை பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு முதன்மை கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி சின்னப்பன் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.
கிருஷ்ணவேணி மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் சக்கர பாணி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (85). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக பல வழக்குகள் உள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
|
குடிபோதையில் குறை பிரசவம்: பெண்ணுக்கு ஒரு வருடம் ஜெயில்
குறைப் பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த போலந்து நாட்டு போதை பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலந்து நாட்டில் உள்ள டோமஸ்ஜோ நகரின் மதுக்கடையில் மது வாங்கச் சென்ற 24 வயது கர்ப்பிணி பெண், போதையில் தள்ளாடி மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, அவளை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவளுக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்தது.
2 வார குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு, சராசரி அளவைக் கடந்து 4.5 கிராமாக இருந்தது.
இதனால், குழந்தையின் இதயத் துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது. சுவாசம் மற்றும் ரத்த சுழற்சியிலும் குறைபாடு காணப்பட்டதால் குழந்தை உயிருக்குப் போராடியது.
குழந்தையின் தாயின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து பரிசோதித்த போது, போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆல்கஹாலின் அளவை விட 23 மடங்கு ஆல்கஹால் அவளது ரத்தத்தில் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் பாதிப்பாகவே குழந்தையின் ரத்தத்திலும் ஆல்கஹாலின் அளவு உயர்ந்து காணப்பட்டதை அறிந்த டாக்டர்கள், போதைப் பழக்கத்தினால் வயிற்றில் வளர்ந்த சிசுவை கொல்ல முயன்ற குற்றத்திற்காக அவளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோர்ட்டில் அவள் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
தீவிர சிகிச்சை பகுதியில் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்படும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறினர்.
குறைப் பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த போலந்து நாட்டு போதை பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலந்து நாட்டில் உள்ள டோமஸ்ஜோ நகரின் மதுக்கடையில் மது வாங்கச் சென்ற 24 வயது கர்ப
|
பாகிஸ்தானில் இன்று 2 இடங்களில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் உள்ள மசூதிகளின் இன்று நிகழ்ந்த 2 குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 18 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த மலகண்ட் மாவட்டத்தின் பஸ்தாரா பகுதியில் உள்ள மசூதிகளில் இன்று பிற்பகல் 1 மணியளவில் 'ஜும்மா' தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, அருகருகே உள்ள 2 மசூதிகளில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன.
மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பில் மசூதி கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என போலீஸ் துணை கமிஷனர் அம்ஜத் அலி கூறினார்.
கடந்த மே 11ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற பின்னர் கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் உள்ள மசூதிகளின் இன்று நிகழ்ந்த 2 குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 18 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த மல
|
வடகொரியாவிடம் 200-க்கும் மேற்பட்ட மொபைல் ஏவுகணைகள்
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது.அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் இருந்து வெளிவந்த தகவலை அடுத்து, கொரியாவின் பாதுகாப்பு ஆய்வு மையம் இதனைச் செய்துள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினைகளையும் மீறி வடகொரியா ஆயுதங்களில் முதலீடு செய்வதாக, அமெரிக்கா கருத்து தெரிவித்ததை அடுத்து அவர்களிடம் நகர்த்தக்கூடிய தன்மையுடன் 94 ஏவுகணைகள் இருக்கலாம் என்று தென்கொரிய அரசு நினைத்திருந்தது.
ஆனால், தற்போது வடகொரியாவில் குறைந்த தொலைவு சென்று தாக்கும் 150 ஏவுகணைகளும், குறிப்பிட்ட தொலைவு சென்று தாக்கும் 50 ஏவுகணைகளும் இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்திருந்து பின்னர், அதனை வடகொரியா வாபஸ் பெற்ற நிலையில், எழுந்த இந்த கருத்துக்கு பாதுகாப்பு ஆய்வு மையம் பதிலளிக்கவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் அணு சோதனையில் ஈடுபட்ட வடகொரியா தற்போது முசுடன் ஏவுகணைகளைப் பயன்படுத்தி புதிய பிரச்சனைகளை உருவாக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிகாரிகள் கருதுகின்றனர்.
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது.அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் இருந்து வெளிவந்த த
|
செங்குன்றம் அருகே பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு: லாரி டிரைவர் கைது
சென்னை செங்குன்றத்தை அடுத்த பழைய அலமாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனி கிருஷ்ணன். இவரது மகள் சாவித்திரி வயது 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செங்குன்றத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி சாவித்திரி எடப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது பழைய அலமாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் (24), மாணவி சாவித்திரியை கடத்தி சென்றார். பின்னர் ஆசை வார்த்தை கூறி கற்பழித்தார்.
இது தொடர்பாக சாவித்திரியின் தந்தை முனி கிருஷ்ணன் சோழவரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பழைய அலமாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனி கிருஷ்ணன். இவரது மகள் சாவித்திரி வயது 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செங்குன்றத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்
|
ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது: விமானிகள் உள்பட 9 பேர் காயம்
நேபாள நாட்டில் பசுமைமிக்க மலைகள் சூழ்ந்த ஏராளமான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அன்னபூர்னா பகுதியில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகள் குவிகிறார்கள்.
இந்நிலையில் நேபாள நாட்டிலுள்ள சுற்றுலா தலமான பொக்காரா என்ற இடத்திலிருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 3 விமானிகள், 8 ஜப்பான் நாட்டினர் உள்பட 21 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் காலை 8.30 மணி அளவில் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகேயுள்ள காளி-கண்டகி ஆற்றில் இறங்கியது.
இந்த விபத்தில் விமானிகள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.
நேபாள நாட்டில் பசுமைமிக்க மலைகள் சூழ்ந்த ஏராளமான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அன்னபூர்னா பகுதியில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகள் குவிகிறார்கள்.

|
விமானத்தில் பாட்டு பாடியதால் இறக்கிவிடப்பட்ட இளம்பெண்
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலில் இருந்து நியூயார்க்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஒரு இளம் பெண் பயணம் செய்தார். விமானம் புறப்பட்டதில் இருந்து பாப் பாடகர் ஒயிட்னியின் ஆல் வேல்ஸ் லவ் யூ என்ற பாடலை பாடிக்கொண்டே இருந்தார். இது உடன் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கு இடையூறையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது.
எனவே, விமானிகளிடம் இது குறித்து புகார் செய்தனர். உடனே, அவர்கள் பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் அவரை அணுகி பாடல் பாடுவதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை அவர் கண்டு கொள்ள வில்லை. உடனே, அதே விமானத்தில் பயணம் செய்த ஏர்மார்ஷல் அப்பெண்ணை கைது செய்தார்.
இதற்கிடையே, அந்த விமானம் வழியில் கன்சாஸ் சர்வதேச விமானத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு அப்பெண் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டார். பின்னர், கன்சாஸ் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் அபராதம் எதுவுமின்றி விடுவிக்கப்பட்டார். இந்த தகவலை கன்சாஸ் விமான நிலைய செய்தி தொடர்பாளர் ஜோமெக்பிரைடு தெரிவித்தார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலில் இருந்து நியூயார்க்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஒரு இளம் பெண் பயணம் செய்தார். விமானம் புறப்பட்டதில் இருந்து பாப் பாடகர் ஒயிட்னியின் ஆல் வேல்ஸ் லவ் யூ என்ற பாடலை பா
|
நடுவானில் பறந்தபோது விமானி அறை கதவு திறக்காததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
ஏர் இந்தியா விமானத்தில் விமானி கழிவறைக்கு சென்றிருந்தபோது அவரது அறையின் (காக்பிட்) கதவு உள்புறமாக மூடிக்கொண்டது. இதனால் விமானியால் விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் பதற்றமமடைந்தனர்.
ஏர்-இந்தியா உள்நாட்டு விமானம் டெல்லி-பெங்களூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த விமானம் பெங்ளூரில் இருந்து டெல்லிக்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது தலைமை விமானிக்கு இயற்கை உபாதை ஏற்படவே அவர் கழிவறைக்கு சென்றார்.
இயற்கை உபாதைகளை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது அவரது அறையின் கதவு உள்புறமாக மூடிக்கொண்டது. எவ்வளவோ போராடி பார்த்தும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் தலைமை விமானி விமானத்தை இயக்க முடியாத நிலைமை ஏற்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பீதியும் பதட்டமும் ஏற்பட்டது.
இதனையடுத்து விமானி அறையின் உள்ளே இருந்த மற்றொரு விமானிக்கு வெளியே இருந்து தலைமை விமானி ஆலோசனைகளை வழங்கினார். அவரது ஆலோசனைப்படி போபாலில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
போபாலில் விமானம் தரையிறக்கப்பட்டதும் விமானி அறையின் கதவுகள் சரி செய்யப்பட்டு விமானம் மீண்டும் டெல்லியை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
ஏர் இந்தியா விமானத்தில் விமானி கழிவறைக்கு சென்றிருந்தபோது அவரது அறையின் (காக்பிட்) கதவு உள்புறமாக மூடிக்கொண்டது. இதனால் விமானியால் விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் பதற்றமமடைந்தனர்.

|
சாதனைக்கு வயது தடையல்ல: 8 வினாடிகளில் பற்களால் தேங்காயை உரிக்கும் முதியவர்
மட்டையுடன் கூடிய முழு தேங்காயை தனது உறுதியான பற்களால் எட்டே வினாடிகளில் உரித்து, 63 வயதிலும் சாதனை படைத்து வருகிறார், பனாமா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரெஸ் கார்டின்.கடப்பாரை மற்றும் அரிவாளின் உதவியின்றி 6 மணி நேரத்திற்குள் 500 தேங்காய்களை என்னால் உரிக்க முடியும்.
இந்த சாதனையின் மூலம் கின்னஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம்பெற வேண்டும் என்று கூறுகிறார், இவர்.
இவர் அசுர வேகத்தில் தேங்காய் மட்டைகளை பல் மற்றும் கைவிரல்களினால் பிய்த்துத் தள்ளும் அழகை ஏராளமான ரசிகர்கள் தங்களது கேமரா மற்றும் செல்போன்களில் பிரமிப்புடன் படம்பிடித்து செல்கின்றனர்.
தனது தொழில் அனுபவத்தை விவரிக்கும் ஆண்ட்ரெஸ் கார்டின், ‘பல்லினால் தேங்காய் உரிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. இதற்கு தாடையில் சக்தி வேண்டும். பற்களில் சக்தி வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அனுக்கிரகமும் வேண்டும்’ என்கிறார்.
மட்டையுடன் கூடிய முழு தேங்காயை தனது உறுதியான பற்களால் எட்டே வினாடிகளில் உரித்து, 63 வயதிலும் சாதனை படைத்து வருகிறார், பனாமா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரெஸ் கார்டின்.கடப்பாரை மற்றும் அரிவாளின் உதவியின்றி 6 மணி நேரத்
|
ஆஸ்திரேலியா அருகே வடக்கு மரியானா தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு
பசிபிக் கடலில் மேற்கு பகுதியில் வடக்கு மரியானா தீவுகள் நாடு உள்ளது. 15 தீவுகளை கொண்டது. இங்கு 4 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். அங்குள்ள சாய்பான் நகரில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் அதாவது 54 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை அங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சாய்பான் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் அதிர்வு ஏற்பட்டது. எனவே, வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
இதற்கிடையே 7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இருந்தும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் எதுவும் தெரியவில்லை. கடலுக்குள் சுனாமி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற எச்சரிக்கை விடப்படாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
பசிபிக் கடலில் மேற்கு பகுதியில் வடக்கு மரியானா தீவுகள் நாடு உள்ளது. 15 தீவுகளை கொண்டது. இங்கு 4 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். அங்குள்ள சாய்பான் நகரில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் அதாவது 54 ஆய
|
சென்னை நந்தம்பாக்கத்தில் ராணுவ அதிகாரியின் மனைவியை கொன்றது உறவினர்
சென்னை நந்தம்பாக்கம் ராணுவ குடியிருப்பில் (டிபன்ஸ் காலனி) வசித்து வந்தவர் ராதா (வயது 75). இவரது கணவர் பாலசுப்பிரமணியம் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை. 2 மகள்கள் மட்டுமே உள்ளனர். மூத்த மகள் பெங்களூரில் வசித்து வருகிறார். இளைய மகள் வீணா ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். தனிமையில் வசித்து வந்த ராதாவுக்கு துணையாக வீணா தற்போது அவருடனேயே தங்கி உள்ளார்.
இவரது மகளும் (ராதாவின் பேத்தி) பாட்டியுடனே தங்கி இருந்து படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக இவர்கள் இருவரும் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால்ராதா வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியரான சுரேஷ் என்பவர் ராதாவின் வீட்டுக்கு வந்தார். கண்பார்வை கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ராதாவிடம் மூக்கு கண்ணாடியை கொடுப்பதற்காக சென்ற அவர், வீட்டுக்குள் ராதா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் அவர் கூறினார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ராதாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராதா அணிந்திருந்த 10 பவுன் நகை காணாமல் போயிருந்தது. இந்த நகையை கொள்ளையடிப்பதற்காக மர்ம வாலிபர் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் வைத்தே மது அருந்தியதற்கான அடையாளங்கள் தென்பட்டன. கண்ணாடி டம்ளர் ஒன்றில் குடித்து விட்டு மீதம் வைத்த மது இருந்தது. அதில் இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். ராதாவின் வீட்டில் லட்சுமி என்ற பெண் வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது வந்து வீட்டு வேலைகளை செய்து விட்டு செல்வார். மற்றபடி அவரது வீட்டுக்குள் யாரும் எளிதாக செல்ல முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை வைத்து பார்க்கும்போதும், வீட்டில் வைத்து மது அருந்தி இருப்பதை பார்க்கும்போதும், ராதாவுக்கும் நன்கு தெரிந்த நபர்தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள். நேற்று ராதா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு திட்டம் போட்டு அவருக்கு தெரிந்தவர்களே இப்படுகொலை செய் திருப்பது மட்டும் உறுதி படுத்தப்பட்டுள்ளது ஆனால் கொலையாளி யார்? என்பது மர்மமாகவே உள்ளது.
இதுதொடர்பாக ராதாவின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி வீட்டில் வைத்தே கோழிக்கறியும் சாப்பிட்டுள்ளான். மதியம் 2 மணிக்கு பின்னர் 4 மணிக்குள் ராதா கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் டிபன்ஸ் காலனி பகுதியில் யார்- யார் நடமாடியுள்ளனர் என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.
கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடைய ஐதராபாத் சென்றுள்ள ராதாவின் மகள் சென்னை திரும்புகிறார். அவரிடம் யார்-யார் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி துப்பு துலக்கவும் போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கம் ராணுவ குடியிருப்பில் (டிபன்ஸ் காலனி) வசித்து வந்தவர் ராதா (வயது 75). இவரது கணவர் பாலசுப்பிரமணியம் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவ
|
நியூசிலாந்து அருகே டோங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
டோங்கா' பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைத்துள்ள 176 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவு நாடு ஆகும். இந்நாடு நியூசிலாந்துக்கு வடகிழக்கே 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.16 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளியாகப் பதிவாகியுள்ளது. டோங்கா நாட்டின் நையாபு நகரத்தில் இருந்து 139 கிலோமீட்டர் தொலைவில் இந்தநிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில் 205 ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் இல்லை.
டோங்கா' பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைத்துள்ள 176 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவு நாடு ஆகும். இந்நாடு நியூசிலாந்துக்கு வடகிழக்கே 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.16 மணியள
|
கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி அபுதாபி கல்லூரி மாணவிகள் சாதனை
 கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் உள்ளது கிளிமஞ்சாரோ சிகரம். இதன் உயரம் 5895 மீட்டர் ஆகும். கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான சிகரமாகும். உலக அளவில் இது நான்காவது உயரமான சிகரம் ஆகும்.
இந்த சிகரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியில் உள்ள கலீபா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவிகளும், 3 ஆசிரியைகளும் ஏறி சாதனை படைத்துள்ளனர். கிளிமஞ்சாரோ சிகரத்தில் மைனஸ் 10 முதல் 20 டிகிரி வரை குளிர் நிலவும். இந்த நடுங்கும் குளிரிலும் சிகரத்தில் 6 நாட்களில் ஏறி இவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பெண் கல்விக்கு நிதி திரட்டுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று இந்தக் குழுவினர் தெரிவித்தனர். இந்த பயணத்தின் மூலம் இந்திய மதிப்பில் 6 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த ஒரு குழு கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு இக்குழு அபுதாபி திரும்பியுள்ளது.
 கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் உள்ளது கிளிமஞ்சாரோ சிகரம். இதன் உயர
|
துருக்கி கார் குண்டுவெடிப்பில் 18 பேர் பலி
உள்நாட்டு சண்டை நடைபெற்று வரும் சிரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி வருகின்றனர். அவர்களுடன் போராளிகளும் செல்வதாகவும், அவர்களுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதாகவும், சிரியா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், துருக்கி நாட்டின் சிரியா எல்லையோரம் அமைந்துள்ள ரெய்ஹான்லி நகரில் இன்று மாலை கார் குண்டுகள் வெடித்தன. நகரின் சிட்டி ஹால் மற்றும் போஸ்ட் ஆபிஸ் அருகே 4 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயமடைந்தனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதி தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் இருந்து வரும் போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருவதால், துருக்கி அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பை அடுத்து சிரியாவிலிருந்து வந்த கார்களையும், மக்களையும் அங்குள்ளவர்கள் அடித்து நொறுக்கினர்.
உள்நாட்டு சண்டை நடைபெற்று வரும் சிரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி வருகின்றனர். அவர்களுடன் போராளிகளும் செல்வதாகவும், அவர்களுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதாகவும், சிரியா குற்றம்சாட்டி வருகிறது
|